ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை : வெளிநாட்டில் பயிற்சி பெற்ற 28 கொலையாளிகளைக் கொண்ட குழு அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை : வெளிநாட்டில் பயிற்சி பெற்ற 28 கொலையாளிகளைக் கொண்ட குழு அடையாளம்

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற 28 கொலையாளிகளைக் கொண்ட ஒரு குழு இந்த வார தொடக்கத்தில் ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்சை படுகொலை செய்ததாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர்களில் 26 பேர் கொலம்பியர்கள், மற்றைய இருவர் ஹெய்ட்டி வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் என காவல்துறைத் தலைவர் லியோன் சார்லஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

சந்தேக நபர்களில் 8 பேரை இன்னும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுன்ன. அதே நேரத்தில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள சந்தேக நபர்கள் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலைத் திட்டமிட்டவர் யார் அல்லது அதைத் தூண்டியது எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

53 வயதான மொய்ஸ் புதன்கிழமை அதிகாலையில் அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், நாடு முழுவதும் 15 நாள் அவசரகால நிலை நடைமுறையில் உள்ளது.

No comments:

Post a Comment