நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முன்னின்று செயற்பட்டவர் பஷில் ராஜபக்ஷ - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முன்னின்று செயற்பட்டவர் பஷில் ராஜபக்ஷ - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பிரதான பொறுப்புதாரியாவார். நல்லாட்சி அரசாங்கம் 5 வருட பதவிக் காலத்தை முழுமைப்படுத்த இடமளிக்கவில்லை. ஆகவே இவரது பாராளுமன்ற வருகை ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு பலமிக்கதாக அமையும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் அரசியல் ரீதியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரது சிறந்த அரசியல் புலமை பொதுஜன பெரமுன அனைத்து தேசிய தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்கு வழி வகுத்தது.

சிறந்த அரசியல் புலமையின் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கம் 5 வருட காலம் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய இடமளிக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முன்னின்று செயற்பட்டவர் பஷில் ராஜபக்ஷ இவரது திட்டமிடல் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணியாக அமைந்தது.

பஷில் ராஜபக்ஷ பலம் வாய்ந்த அமைச்சு பதவியை பொறுப்பேற்பார். இவரது வருகை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு பாரியதொரு சக்தியாக அமையும்.இவ்வாரத்திற்குள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்.

பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இதனாலேயே எதிர்த்தரப்பினர் அதிக அச்சம் கொண்டுள்ளார்கள். அத்துடன் அமைச்சரவையிலும் ஒரு சில விடயதானங்களில் மாற்றம் ஏற்படும் அரசாங்கத்தை பலமான முறையில் முன்னெடுத்து செல்வதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். என்றார்.

No comments:

Post a Comment