பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி கொவிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் விருப்பமானவர்கள் மாத்திரம் இதில் கலந்துகொள்ளலாம் எனவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா அன்டிஜன் பரிசோதனை பாராளுமன்ற வளாகத்தில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்போது இந்த பரிசோதனைக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடுகின்ற நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் என்.டி.ஜன் பரிசோதனையில் கலந்துகொள்ள முடியும்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment