ஆபத்தான நிலையில் இருந்த இளைஞன் : தோட்டத் தொழிலாளர்களை கேவலமாக பேசிய வைத்தியர் : எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

ஆபத்தான நிலையில் இருந்த இளைஞன் : தோட்டத் தொழிலாளர்களை கேவலமாக பேசிய வைத்தியர் : எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவருக்கு எதிராக, உடபுஸ்லாவ - இராகலை பிரதான வீதியின், டெல்மார் மத்திய சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரதேச மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இராகலை டெல்மார் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

பிரதேச மக்களால் மீட்கப்பட்ட குறித்த இளைஞன், உடபுஸ்ஸலாவ ஆதார வைத்தியசாலைக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு 2 மணி நேரமாகியும் வைத்தியர் வருகை தராதன் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இளைஞனை கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு நான்கு மணி நேரத்தின் பின்னரே இளைஞனை வைத்தியசாலையில்; அனுமதித்துள்ளனர்.

மேலும் அங்கு வருகை தந்த வைத்தியர் ஒருவர், 'நான் எஸ்டேட் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை என தரகுறைவாக அங்கிருந்தவர்களை பேசியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களை தரம்குறைவாக பேசிய வைத்தியருக்கு எதிராக இன்று காலை டெல்மார் தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு குறித்த வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment