சுபீட்சத்தின் நோக்கில் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த உற்பத்தி கிராமம் எண்ணக்கருவை செயற்படுத்தினோம் என சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 500 கிராமங்களை “சௌபாக்கியா உற்பத்தி கிராமங்களாக” அபிவிருத்தி செய்யும் நிகழ்வு நேற்று (01) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், நம் நாட்டில் திறமைகள் உள்ள, அர்ப்பணிப்பு உள்ள மற்றும் திறமையான சிறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பிற வருமான ஆதாரங்களை உருவாக்கக்கூடிய குழுவினரை இனங்கண்டு அவர்களை இந்த கிராம எண்ணக்கருவிற்குள் உள்ளீர்த்து அவர்களை வருமானம் ஈட்டும் குழுவாக மாற்றுவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
இவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்தி ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகளை செயற்படுத்தி இந்நாட்டை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என நான் இங்கு உறுதியளிக்கிறேன்.
இவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் போது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தினோம். சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பு ஊடாக செயற்படுத்தப்படும் வீடமைப்பு வேலைத்திட்டம் அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
அதற்கமைய 2020 ஆண்டிற்கான உங்களது வேலைத்திட்டத்திற்கு அமையவும் 2021ஆம் ஆண்டிற்கான சமுர்த்தி திணைக்களத்தின் வேலைத்திட்டத்தின் ஊடாகவும் செயற்பட்டு குறைந்த வருமானம் பெறும் மற்றும் மிகவும் கஷ்ட பிரதேசங்களில் வசிக்கும் குழுவினருக்கு 1000 வீடுகளை அமைத்து கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய 2020 இல் ஆரம்பித்த வீட்டை இன்று உங்களது கரங்களினால் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் எமக்கு வழங்கிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.
அதேபோன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் செயற்படுத்தப்படும் தொழில்முனைவோர் திட்டத்திற்காகவும் நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு அத்தொழில்முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒரு அமைச்சு என்ற ரீதியில் தொடர்புபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சீ.பீ.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர, அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன், சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் R.P.B.திலகசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment