ஹிஷாலினியின் உடலை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு : ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணி நேர தடுப்பை தொடர்ந்து 14 நாள் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

ஹிஷாலினியின் உடலை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு : ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணி நேர தடுப்பை தொடர்ந்து 14 நாள் விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனினுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீள தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அத்தோடு, குறித்த சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகிய நால்வரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றையதினம் (26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.

No comments:

Post a Comment