அரசியல் சஞ்சலங்கள் : பிரதமர் மஹிந்த, ரணில் சந்திப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

அரசியல் சஞ்சலங்கள் : பிரதமர் மஹிந்த, ரணில் சந்திப்பு

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் நடப்பு ஆண்டின் ஆரம்ப காலம் தொடக்கத்திலிருந்தே தொடங்கி நாளுக்குநாள் பொது மேடைகளில் விமர்சிக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது.

இதற்கு சிறந்த உதாரணமே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையின் பின்னர் ஏற்பட்ட மோதல்களாகும்.

இவ்வாறானதொரு நிலையில் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் இந்த நிலைமை சற்று மேலோங்கி சுதந்திர கட்சி மற்றும் ஆளும் கட்சிக்குள் உள்ள இடதுசாரி கட்சிகள் பொதுஜன பெரமுனவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளதால் தேசிய அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க நேற்று இரவு அதாவது நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பதியேற்ற அன்றைய தினம் இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடுவதை போன்று புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதனை மையப்படுத்தி அரசியல் ரீதியிலான விமர்சனங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திட்டமிடப்பட்ட அரசியல் சந்திப்பொன்றல்ல.

மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் வழி உறவு முறை ஒருவரின் பிறந்த தின நிகழ்வை மையப்படுத்தியதாகவே உள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிறந்தி ராஜபக்ஷவின் சகோதரர் நிஹாந்த விக்கிரமசிங்க உட்பட அவரது குடும்பத்தாரும் கலந்துகொண்டிருந்தனர்.

எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பை அரசியல் ரீதியான சந்திப்பாக கருத முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சஞ்சலங்கள் குறித்த சந்திப்பை அரசியல் மாற்றத்திற்கான சந்திப்பாக சிந்திக்க வைத்து விட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad