பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி வெளியானது - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி வெளியானது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, பசில் ராஜபக்‌ஷவின் பெயர் குறிக்கப்பட்ட அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தேசியப் பட்டியில் எம்.பியாக இருந்த ஜயந்த கெட்டகொட நேற்றையதினம் (06) அப்பதவியிலிருந்து விலகி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் பொதுஜன பெரமுன கட்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றையதினம் (07) தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad