கொள்ளையிடுவதற்காக வீடு புகுந்த திருடன் தாக்குதலில் பலி..! - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

கொள்ளையிடுவதற்காக வீடு புகுந்த திருடன் தாக்குதலில் பலி..!

வீடொன்றுக்குள் இரகசியமாக நுழைந்த நபரொருவரை வீட்டார் தாக்கியதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வத்தளை - எவரிவத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொள்ளையிடும் நோக்கில் 32 வயது மதிக்கதக்க நபரொருவர் வத்தளை - எவரிவத்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்துள்ளார். 

வீட்டிக்குள் யாரோ நுழைந்ததை உணர்ந்த வீட்டார் சந்தேக நபரை பிடித்து தாக்கியுள்ளனர். இதன்போதே அவர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார் தண்டனை சட்டக் கோவையின் 96 ஆவது பிரிவின் பிரகாரம், இவ்வாறு கொள்ளையிடும் நோக்குடன் இரவு வீட்டுக்குள் நுழைபவர்களை தாக்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளதுடன் இதன்போது ஏற்படகூடிய மரணங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad