ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் படிப்படியாக தீர்க்கப்பட வேண்டியதை முழுமையாக கோருவது நியாயமற்றது என்கிறது பொது கல்விச் சேவைகள் சங்கம் - News View

Breaking

Friday, July 23, 2021

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் படிப்படியாக தீர்க்கப்பட வேண்டியதை முழுமையாக கோருவது நியாயமற்றது என்கிறது பொது கல்விச் சேவைகள் சங்கம்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு படிப்படியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் என்றும் எனினும் ஆசிரியர் சங்கங்கள் அதனை முழுமையாக கோருவதாக இலங்கை பொது கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவர் வசந்த ஹந்தபஹன்கொட தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றும் ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பதை விடுத்து வேறு செயற்பாடுகள் மூலம் சம்பள முரண்பாட்டு கோரிக்கையை வெற்றிகொள்ள முடியுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ள நிலையில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் அனைத்தையும் அதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாககுறிப்பிட்டுள்ள அவர், மேலும் சில தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான நோக்கத்தோடு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment