இலங்கையில் மேலும் 10 டெல்டா திரிபு வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, July 23, 2021

இலங்கையில் மேலும் 10 டெல்டா திரிபு வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டனர்

நாட்டில் டெல்டா திரிபு வைரஸ் தொற்று நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் மேலும் 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 5 பேர் கெஸ்பேவ பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பெறுபேறு கிடைக்கப் பெற்ற பின்னர் அது தொடர்பில் முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு வார காலம் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் நாட்டில் இந்திய திரிபு டெல்டா வைரஸ் தொற்று நோயாளிகள் 38 பேர் சுகாதாரத் துறையினரால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 997 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதற்கிணங்க நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 64 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment