அமசோன் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியை துறந்தார் ஜெப் பெசோஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

அமசோன் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியை துறந்தார் ஜெப் பெசோஸ்

உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமசோன் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து ஜெப் பெசோஸ் இன்று விலகியுள்ளார்.

ஜெப் பெசோஸ் இனி, விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது.

27 ஆண்டுகளுக்கு முன்பாக அமசோன் நிறுவனத்தை தொடங்கிய அதே நாளில் ஜெப் போசஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

அவரது இடத்திற்கு அமசோன் இணையத்தள பொறுப்புகளை நிர்வகித்து வரும் ஆன்டி ஜாஸ்ஸி நியமிக்கப்படவுள்ளார்.

அமசோன். உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும். 1994ம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் தொடங்கப்பட்ட இந்த அமசோன் நிறுவனமானது, தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மிகவும் பிரபலமான நிறுவனமாகவும் காணப்படுகிறது.

உலகின் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்த ஜெப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டொலர் ஆகும்.

இணையதளம் மூலம் 1994ஆம் ஆண்டு புத்தக விற்பனையை தொடங்கிய ஜெப் பெசோஸ், தற்போது தொலைக்காட்சி, கணினி என அனைத்து பொருள்களையும் இணையதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமசோனை உருவாக்கியுள்ளார்.

No comments:

Post a Comment