அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கீழுள்ள விடயதானங்கள் : முழு விபரங்கள் இதோ..! - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கீழுள்ள விடயதானங்கள் : முழு விபரங்கள் இதோ..!

(இராஜதுரை ஹஷான்)

பசில் ராஜபக்ஷ, இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அந்த வகையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கீழுள்ள விடயதானங்களின் முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

பேரினப் பொருளாதார கொள்கைகள், வருடாந்த வரவு செலவு மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டங்கள் தொடர்பான பொறுப்புக்கள், அரச நிதி முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேமிப்புக்கள் மற்றும் முதலீடுகள், அரச கடன்கள், வங்கிகள், நிதி மற்றும் காப்புறுதி அலுவல்கள், சர்வதேச நிதி ஒத்துழைப்புக்கள், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை வழிநடத்தல் ஆகிய விடயங்கள் நிதியமைச்சின் விடய எல்லைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

கடமைகளும், பொறுப்புக்களும்
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய அரசினால் செயற்படுத்தப்படும் தேசிய கொள்கையின் அடிப்படையில் மக்கள் மையமான பொருளாதாரத்தினை உருவாக்குவதற்காக உரிய இராஜாங்க அமைச்சுக்களுக்கு கொள்கை ரீதியில் வழிக்காட்டலை வழங்கல், பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நிதி விடயங்களுக்குரிய திட்டங்களை தயாரித்தல், அரச ஒழுங்கு விதிகளுக்கு அமைய நிதி விடயங்களுக்குரிய கொள்கைகளை தயாரித்தல், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் விடயங்கள் மற்றும் அதற்குரிய கொள்கைகள் , நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்ளை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்தல் மற்றும் தொடராய்வு செய்தல், மீளாய்வு செய்தல்.

விசேட முன்னுரிமைகள்
அனைவருக்கும் நலன் கிடைக்கின்றதும் அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வருமான முரண்பாடுகள், தணிக்கப்படுகின்றதுமான நிலைபேறான உயர்மட்ட பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சியை பொறுப்பேற்றல், குறைந்த வருமானம் பெறுவோருக்கு முன்னுரிமை வழங்கி,தொழிலின்மையை குறைத்துக் கொள்வதும், தனிநபர் வருமானத்தை அதிகரித்தலும்.

வருடாந்த சராசரி பணவீச்சு வீதத்தை குறைந்த மட்டத்தில் பேணுவதன் ஊடாக விலைகளின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளல், வரவு- செலவு பற்றாக்குறை மற்றும் அரச கடன்களை குறைத்துக் கொள்வதன் மூலம் அரச வருமான கொள்கைகளின் நிச்சயமின்மையை குறைத்தல்.

கடன் வட்டி வீதங்களை குறைந்த மட்டத்தில் பேணுவதன் ஊடாக நிதி வள பொருளாதார தேவைகளை விரிவாக்கல், ரூபாவின் பெறுமதி நிலைப்பாடு உறுதியுறும் வகையில் நிதி மற்றும் கொடுப்பனவு ஐந்தொகை கொள்கைகளையும் வட்டி வீதத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளல்.

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தல், குறைந்த வருமானம் பெறுபவர்களை வலுப்படுத்தல், முதலீட்டு ஊக்குவிப்புக்கு தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்தல்,பொது மக்கள் பயன் பெறுமாறு தேசிய வியாபார சமூகத்திற்கு தேவையான வர்த்தகச் சூழலை விரிவாக்கல் அரச தொழில் முயற்சிகளை பலப்படுத்தல், அரச வருமானங்கள் மற்றும் செலவு முகாமையை வினைத்திறமைப்படுத்துற்கு தேவையான தாபன கட்டமைப்பை வலுப்படுத்தல்.

உரிய தாபனங்கள்
பொதுச் திறைச்சேரி நடவடிக்கைகளுக்குள் பொதுச் திறைச்சேரி, அரச நிதி கொள்கை திணைக்களம், தேசிய வரவு செலவு திட்டத் திணைக்களம், முகாமைத்துவ சேவை திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரச நிதி திணைக்களம், திறைசேரி நடவடிக்கை திணைக்களம், அரச நிதி கணக்குத் திணைக்களம், மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டுத் திணைக்களம், தகவல் தொழினுட்ப முகாமைத்துவ திணைக்களம், நிதி அலுவல்கள் திணைக்களம், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களம், அபிவிருத்தி நிதித் திணைக்களம் ஆகியவை உள்ளடங்குகின்றன.

அரச வருமானம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குள் உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கம், மதுவரி திணைக்களம், தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் உள்ளடங்குகின்றன.

வங்கி நிதிகள் மற்றும் மூலதனச்சந்தை கொள்கைகள் மற்றும் ஒழுங்குத்துறை அலுவல்களுக்குள் இலங்கை மத்திய வங்கி, சகல அரச வங்கிகள், நிதி காப்புறுதி மற்றும் அவற்றின் நிர்வாகத்திற்குட்பட்ட கம்பனிகள் மற்றும் அதனுடன் ஒன்றிணைந்த நிறுவனங்கள், இலங்கை காப்புறுதிச்சபை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், கடன் தகவல் பணியகம், கம்பனி பதிவாளர் திணைக்களம், இலங்கை பிணைகள் மற்றும் செலவாணி ஆணைக்குழு, இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபணம், ஆகியவை உள்ளடங்குகின்றன.

நிதிய ஒதுக்கீடுகளுக்கு கீழ் லோகோர் சீமாட்டி நிதியம், வேலை நிறுத்தம், கலவரம் சிவில் பிரச்சினைகள், பயங்கரவாதம் தொடர்பிலான நிதியம், தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், உள்ளடிட்ட 17 நிதியங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வேறு நிறுவனங்களுடன் இணைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்குள் தொலைத் தொடர்பு திணைக்களம், வனஜீவராசிகள் நிதியம், இலங்கை வெகுசன ஊடகப் பயிற்சி நிறுவனம், உள்ளக வர்த்தக திணைக்களம், தானியங்கள் பயிர்ச்செய்கை மற்றும் தானிய ஆராய்ச்சி உற்பத்தி அதிகார சபை, வரையறுக்கப்பட்ட ஜனதா பேர்ட்டி லைசர் என்டர்பிரைஷர், சிறுவர்களை பாதுகாக்கும் நம்பிக்கை பொறுப்பு நிதியம், ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment