துருக்கியில் உயிரிழந்த ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

துருக்கியில் உயிரிழந்த ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள்

துருக்கியின் கொன்யா பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளன.

துருக்கியின் கொன்யா பகுதியில் உள்ள டஸ் ஏரி அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். உவர் நீர் ஏரியான இங்கு ஏராளமான வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

வறண்டு கிடக்கும் இந்த ஏரியில் கடந்த இரு வார காலமாக ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடக்கின்றன.

டஸ் ஏரிக்கு நீர்வரக் கூடிய பகுதிகளை தடுத்து தங்கள் பகுதிக்கு பாசனத்திற்காக சிலர் தண்ணீரை திருப்பிக் கொண்டதால், ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு போயிருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக ஏரி தண்ணீரிலும் உவர் தன்மை பெரிதும் அதிகரித்து, பறவைகளை பறக்க விடாமல் அவற்றின் உயிரை பறித்திருக்கலாம் என்று Selcuk பல்கலைக்கழக உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாசனத்திற்கான தண்ணீர் கொள்கையை தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்வதால், ஏதுமறியா பிளமிங்கோ பறவைகள் இரையாகிக் கொண்டிருக்கும் பரிதாபம் நிகழ்ந்து வருவதாக சூழலியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் .

No comments:

Post a Comment