திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் இன்னொரு நாட்டில் இருந்துதான் வர வேண்டுமென்ற கட்டாயமில்லை, கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் - நுண்ணுயிர் நிபுணர் வைத்தியர் வைதேகி ரதீபன் பிரான்சிஸ் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் இன்னொரு நாட்டில் இருந்துதான் வர வேண்டுமென்ற கட்டாயமில்லை, கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் - நுண்ணுயிர் நிபுணர் வைத்தியர் வைதேகி ரதீபன் பிரான்சிஸ்

திரிபடைந்த கொரோனா டெல்டா, அல்பா, பீட்டா வைரஸ்கள் இன்னொரு நாட்டில் இருந்துதான் நாட்டிற்கு வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் எங்களுக்குள் இருக்கின்ற வைரஸ் அதிகமாக பரவலடையும் போது அது திரிபடைந்து டெல்டா, அல்பா, பீட்டா போன்ற வைரஸ்களாக மாறலாம் எனவே இதனை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் என மட்டு போதனா வைத்தியசாலை நுண்ணுயிர் நிபுணரும், கிழக்கு பல்கலைக்கழக சவுக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீட சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்தியர் வைதேகி ரதீபன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

திரிபடைந்து வரும் கொரோனா தொடர்பாக மட்டு போதனா வைத்தியசாலை நுண்ணுயிர் நிபுணர் வைத்தியர் வைதேகி ரதீபன் பிரான்சிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றது அது அதிகரிக்கின்றதா குறைகின்றதாக என்பதை விட அது இருக்கின்றது என்பது உண்மை. அதன் தாக்கம் மட்டக்களப்பிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

திரிபடைந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எங்களால் செய்ய வேண்டியது பரவலை எவ்வளவுக்கு தடுத்துக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பரவலை தடுப்பதற்கு நாட்டை பூட்டி வைக்க வேண்டும் ஆனால் நாட்டை பூட்டி வைப்பது எவ்வளவு காலத்துக்கு என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாத ஒரு விடயம்.

ஆகவே நாட்டை திறக்கத்தான் வேண்டும். அப்படி திறக்கும் போது இன்னும் கவனமாக இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கு எங்களை நாங்களை பாதுகாத்துக் கொள்வது பரவலை கட்டுப்படுத்துவதில் ஒரு பெறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.

இதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது அதிகமாக கூட்டங்கள் கூடும் இடங்களை தவிர்த்துக் கொள்வதுடன் கூட்டம் கூடுவதற்கான சந்தர்ப்பத்தை எப்போதும் உருவாக்க கூடாது.

அது திருமண வீடாக இருக்கலாம் மரண வீடாக இருக்கலாம் வேறு தேவையற்ற கொண்டாங்களாக இருக்கலாம் இவைகள் இந்த காலகட்டத்தில் தேவையற்றாக கருதி அதனை தவிர்த்துக் கொள்வது நல்லது.

தொடர்ந்து நோய் அறிகுறிகளுடன் நாளாந்தம் 15 மேற்பட்ட நேயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே எங்களால் முடிந்தளவிற்கு பொறுப்புணர்ச்சியுடன் இந்த பரவலை கட்டுப்படுத்தி எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

கேசரி 

No comments:

Post a Comment

Post Bottom Ad