பி.சி.ஆர் பரிசோதனை செய்த தாதியை தாக்கிய பிக்கு - News View

Breaking

Tuesday, July 27, 2021

பி.சி.ஆர் பரிசோதனை செய்த தாதியை தாக்கிய பிக்கு

ஆணைமடு பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை செய்த வேளை தாதியை கண்ணாடி பீங்கானால் பௌத்த பிக்கு தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை ஆணைமடு தள வைத்தியசாலையைச் சேர்ந்த தாதி ஒருவர் பி.சி.ஆர் பரிசோதனை செய்தவேளை ஏற்பட்ட வலியினால் கோபமடைந்த பிக்கு குறித்த தாதியை தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாதியை தாக்கிய பிக்கு ஆணைமடு குமாரகம விகாரையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பிக்கு காய்ச்சல் காரணமாக ஆணைமடு தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்கப்பட்ட தாதி தலையில் காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலே கீழே விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்யைதினம் அவர் ஆணைமடு நீதிவான் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment