கட்டுநாயக்க பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது - News View

Breaking

Tuesday, July 27, 2021

கட்டுநாயக்க பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க பகுதியில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஆறுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது போலி நாணயத்தாள்களை அச்சுடுவதற்கு பயன்படுத்திய இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று மாலை கட்டுநாயக்க பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை கொண்டு, பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றுள்ளார்.

நாணயத்தாள் தொடர்பில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், இது தொடர்பில் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதின்போது அவரிடமிருந்து மேலும் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 5 மீட்கப்பட்டதுடன், அவற்றை அச்சிடப் பயன்படுத்திய இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான சந்தேக நபர் வெல்லம்பிட்டி, சேதவத்தை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad