நாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை ஒரு வான் கதவு திறக்கப்பட்ட நிலையில், நீர் மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டன/
இதனால் சென்கிளயார் நீர் வீழ்ச்சியின் நீர் மட்டமும் அதிகரித்து, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை அண்மித்துள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment