மத தலங்கள் திறப்பு - திருமண நிகழ்வில் 150 பேர், மரணச்சடங்கில் 50 பேருக்கு அனுமதி - மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை நீடிப்பு : வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

மத தலங்கள் திறப்பு - திருமண நிகழ்வில் 150 பேர், மரணச்சடங்கில் 50 பேருக்கு அனுமதி - மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை நீடிப்பு : வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி

தற்போது நடைமுறையிலுள்ள கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.

இன்று (10) முதல் அமுலாகும் வகையில் குறித்த நடமுறைகள் அமுலுக்கு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன விடுத்துள்ள வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தற்போது நடைமுயைிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

ஆயினும் தொற்றுநோயின் நிலைமையை பொறுத்து சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் ஏற்படுமெனவும், அனைத்து அரச, தனியார் நிறுவனங்களும் இறுக்கமான முறையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய
மத தலங்களை திறக்க அனுமதி

திருமண நிகழ்வில் ஆசன எண்ணிக்கையில் 25% வீதமானோர்/ உச்சபட்சம் 150 பேர்

மரணச்சடங்கில் 50 பேருக்கு அனுமதி

திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் கொள்ளளவில் 50%

உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி

இறுதிக் கிரியைகள் சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில், 50 பேருக்கு அனுமதி

கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், தரக்குறியீடுகளின் விளம்பர நிகழ்வுகளுக்கு அனுமதி: 50 பேருக்கு அனுமதி

உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி

- நிறுவன கூட்டங்கள்; கொள்ளளவில் 25% பேருக்கு அனுமதி

No comments:

Post a Comment