வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - 'சீசர்' என்ற சொல்லை முழுமையாக அகற்ற வேண்டும் : நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக் குழு - News View

Breaking

Tuesday, July 27, 2021

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - 'சீசர்' என்ற சொல்லை முழுமையாக அகற்ற வேண்டும் : நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக் குழு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு எந்த விதமான சட்ட ஏற்பாடும் எமது அரசியலமைப்பில் இல்லை. ஆகவே இது தொடர்பில் பாராளுமன்றில் விவாதமொன்றை நடத்தி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் திசர குணசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஊடாக கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இவர்கள் தங்களது தொழில்துறைகைளை நடத்திச் செல்வதற்குக்கூட வழியில்லாது, பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் தங்களது தொழிற்துறைகைளை முன்னேற்றிச் செல்வதற்கு அரசாங்கம் உதவ முன்வர வேண்டும்.

குறிப்பாக தற்போது முழு உலகையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் விவசாயம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து என பல்வேறு விடயங்களிலும் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றோர் தமது தவணைக் கட்டணங்களை செலுத்துவதற்கு பாரிய கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் தற்கொலைகள், குடும்பங்களில் பிரச்சினைகள், பிரிவுகள் போன்றன ஏற்படுகின்றன.

தற்போது நாட்டில் லீசிங் மாவியா தலைதூக்கி ஆடுகிறது. எமது நாட்டில் 60 பதிவு ‍செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் காணப்படுகின்றன. எனினும், பதிவு செய்யப்படாத நிதி நிறுவங்கள் 15 ஆயிரம் உள்ளன. இந்த பதிவு செய்யப்படாத நிதி நிறுவன உரிமையாளர்கள் ஏதேனும் குற்றங்களை புரிந்தார் என நீதிமன்றினால் தீர்பிடப்பட்டால், அவரிடமிருந்து இரண்டரை இலட்சம் ரூபாவை மாத்திரமே அதிகப்பட்ச தண்டப் பணமாக அறவிட முடயும். அதைத்தாண்டி எதுவும் செய்ய முடியாது.

அதேபோன்று 'சீசர்' என்ற சொல்லை முழுமையாக அகற்றிவிட வேண்டும். இந்த 'சீசர்' என்று சொல்லப்படுகிறவர்கள் தங்களுக்கு நினைத்த விதத்தில் வாடிக்கையாளர்களை பயமுறுத்தி அவர்களது உடைமைகளை பறிமுதல் செய்கின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், ஒம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment