வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் - அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் - அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27.07.2021) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான குறித்த தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத் தடுப்பூசிகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment