பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு : பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Tuesday, July 27, 2021

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு : பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கும், பெண்கள் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் ஆர்வலர்கள் லாஹுரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆரத் மார்ச், ஹாகூக்-இ-கல்க் இயக்கம் மற்றும் முற்போக்கு மாணவர்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் லாஹுர் லிபர்டி சதுக்கத்தில் இடம்பெற்றது.

மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோஷங்களை எழுப்பிய ஆர்வலர்கள், பெண்கள் மற்றும் பாலின சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் வன்முறைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்தி, குற்றவாளிகளைப் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவர் ஒன்றியம் கோஷங்களை எழுப்பியது.

பெண்கள் எதிர்கொள்ளும் இந்த வன்முறைகள் அனைத்தும் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றிய பாசிசம் மற்றும் தவறான கருத்துக்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.

மேலும் பெண்கள் எதிர்கொண்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை அரசு கண்டுகொள்வதாக இல்லை.

சமூக ஊடகங்களில் பிரபலமாகி வரும் குராத்துலைன், சைமா மற்றும் நூர் ஆகியோரின் கொலைகளை சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசின் மௌனம் குறித்து வினாவினர்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடன் நிறத்தப்படாவிடின் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment