அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம் நேற்றிரவு கூடியது! - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம் நேற்றிரவு கூடியது!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம், நேற்றிரவு (06) கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட் தலைமையில் கொழும்பில் கூடி, கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததாக, மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அரசியல் பீட அங்கத்தவருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை, நாளையதினம் 08 ஆம் திகதி இடம்பெறவிருப்பதால், நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்து, அடுத்த கட்ட நகர்வுகளை கட்சி மேற்கொள்வது எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா, பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், கட்சியின் சட்டப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் மற்றும் ஏ.ஜெ.எம்.பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment