அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்ட சவுதி அரேபிய துணை பாதுகாப்பு அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்ட சவுதி அரேபிய துணை பாதுகாப்பு அமைச்சர்

சவுதி அரேபியாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் அமெரிக்காவின் உயர்மட்ட பைடன் நிர்வாக அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சவுதி மகுட இளவரசர் முகம்மது பின் சல்மான் நிர்வாகத்தின் கீழ் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட பின்னர் அமெரிக்க அதிகாரிகளுடன் சவுதி அரேபிய தலைமை மேற்கொள்ளும் முதல் சந்திப்பாக இது கருதப்படுகிறது.

வொஷிங்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காலித் பின் சல்மான், யேமன் போர் மற்றும் ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இளவரசர் காலித் பின் சல்மான், சவுதி அரேபிய ஆட்சியாளரான இளவரசர் முகம்மது பின் சல்மானின் சகோதரர்.

வொஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரும் சவுதி அதிருப்தியுமான ஜமால் கஷோகி 2018 இல் கொலை செய்யப்பட்டமைக்கு முகம்மது பின் சல்மானை அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. எனினும் அந்த குற்றச்சாடு சவுதி அரேபியாவால் மறுக்கப்பட்டது.

No comments:

Post a Comment