தொழிற்சங்கத்தினர் அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளுக்காக செயற்படுகிறார்கள் - நல்லாட்சியில் எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்கிறார் அமைச்சர் காமினி - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

தொழிற்சங்கத்தினர் அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளுக்காக செயற்படுகிறார்கள் - நல்லாட்சியில் எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்கிறார் அமைச்சர் காமினி

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஒரு சில தொழிற்சங்கத்தினர் அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளுக்காக செயற்படுகிறார்கள். அதிபர், ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க எதிர்பார்த்துள்ளோம். நாடு தற்போது எதிர் கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளுக்காக செயற்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கவில்லை.

அரசாங்கத்தை பலவீனமடைய செய்யும் வகையில் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆசிரியர்களின் நலன்களை கருத்திற் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாடு பல்துறையிலும் பாதிக்கப்பட்டுள்ளது. என்பதை ஆசிரியர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad