வெளிநாடுகளில் இருந்து வரும் பணியாளர்களை தனிமைப்படுத்த இலவசமாக தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது - நிமல் சிறிபாலடி சில்வா - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

வெளிநாடுகளில் இருந்து வரும் பணியாளர்களை தனிமைப்படுத்த இலவசமாக தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது - நிமல் சிறிபாலடி சில்வா

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களை தனிமைப்படுத்த இலவசமாக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இதுனில், வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்கள் கொவிட் சட்டத்தின் பிரகாரம் தனிமைப்படுவதற்காக ஹோட்டல்கள் மற்றும் வேறு தங்குமிட நிலையங்களாக 14 மத்திய நிலையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் இலவசமாகவே அங்கு தங்க வைக்கப்படுகின்றார்கள். அதற்கான செலவினங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் பொறுப்பேற்றிக்கின்றது.

மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்பவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். அவர்களுக்கான தடுப்பூசி சர்வதேச நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற தடுப்பூசியே ஏற்றப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment