உச்ச நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தது ஐக்கிய மக்கள் சக்தி - News View

Breaking

Post Top Ad

Friday, July 9, 2021

உச்ச நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தது ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியினால் இன்று (09) உச்ச நீதிமன்றத்தில் 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி அமைதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் கைதுகளை மேற்கொள்ளும் பொலிஸாரின் ஒடுக்குமுறைக்கு எதிராக குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பாண்டர தெரிவித்தார்.

குறித்த மனுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷன ராஜகருணா, மயந்த திஸாநாயக்க ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இம்மனுவின் பிரதிவாதிகளாக, பொலிஸ்மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, அமைதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் தொடர்ச்சியான கைதுகளை மேற்கொள்வதாகவும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளர்.

இவ்வாறான ஒடுக்குமுறையினால் பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்ன அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான மக்களின் அடிப்படை உரிமை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான ஐக்கிய மக்கள் சக்தி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad