மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுகீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுகீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார வசதிகளை மேன்படுத்த இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளின் விளைவாக, இந்திய அரசின் நிதி உதவியுடன் பின்தங்கிய பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இதில் 3000 க்கும் மேற்பட்ட கழிவறைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அமைச்சில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல்துறை முதன்மை செயலாளர் திருமதி பாணு அம்மையார் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்திட்டமானது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதற்காக இலங்கை அரசு தனது முழு ஆதரவையும் வழங்கும் என இராஜாங்க அமைச்சர் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை முதன்மை செயலாளரிடம் தெரிவித்தார்.

பின்தங்கிய பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்பதுடன் இத்திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின் அடிப்படை சுகாதார வசதிகளை மேன்படுத்த முடியும் என பின்தங்கிய கிராமிய பிரதேசஅபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

வீரகேசரி 

No comments:

Post a Comment