கொரோனா வைரஸ் தொற்று 2019 - மனு தொடர்பான தீர்ப்பை பாராளுமன்றத்தில் வாசித்தார் சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

கொரோனா வைரஸ் தொற்று 2019 - மனு தொடர்பான தீர்ப்பை பாராளுமன்றத்தில் வாசித்தார் சபாநாயகர்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொரோனா வைரஸ் தொற்று 2019 (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலத்தின் 2, 3, 4, 6, 7 மற்றும் 10ஆம் வாசகங்களுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 12 ஆம் வாசத்தின் “கொவிட்19 சூழ்நிலையானது” எனும் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் மற்றும் 4 (இ) ஆம் உறுப்புரைகளுக்கு முரணானதெனவும், அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மற்றும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

“கொரோனா வைரஸ் தொற்று 2019 (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பை பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய குழாமின் இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்கமைய சட்ட மூலத்தின் 2, 3, 4, 6, 7 மற்றும் 10 ஆம் வாசகங்களுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 12 ஆம் வாசத்தின் “கொவிட்19 சூழ்நிலையானது” எனும் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் மற்றும் 4 (இ) ஆம் உறுப்புரைகளுக்கு முரணானதென அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனவே, அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மற்றும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட முடியும் என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆயினும், 12 ஆம் வாசகத்தில் உள்ள “கொவிட்19 சூழ்நிலையானது” என்பதன் பொருள்கோடல் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்பட்டால் முரண்பாடு நீங்கி விடும் எனவே பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என சபாநாயகர் தெரிவித்தார்.

சட்ட மூலத்தின் 4 ஆம் வாசகம், அரசியலமைப்பின் 136 ஆம் உறுப்பரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 4 (இ) ஆம் உறுப்பரைக்கு முரணானதெனவும் அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட முடியும்.

மேற்படி வாசகம் நீதிமன்றத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தத்தின் மூலம் திருத்தம் செய்யப்பட்டால் சட்ட மூலத்தின் மேற்படி முரண்பாடு நீங்கி விடும் எனவும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றார்.

சட்ட மூலத்தின் 5, 6 மற்றும் 7 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரைக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என்றும் உயர் நீதிமன்றம்தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருப்பதாகவும், 12 ஆம் வாசகத்தில் உள்ள “கொவிட்19 சூழ்நிலையானது” என்பதன் பொருள்கோடலுடன் சேர்த்துவாசிக்கப்படும் சட்டமூலத்தின் 2, 3, 4, 6, 7, 8, 9 மற்றும் 10ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 3ஆம் மற்றும் 4 (இ) ஆம் உறுப்புரைகளுக்கு முரணானதாகாது மற்றும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என மூன்று நீதிபதிகளை உள்ளடக்கியமற்றைய நீதிபதி தீர்ப்பளித்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

12 ஆம் வாசகத்தில் உள்ள “கொவிட்19 சூழ்நிலையானது” என்பதன் பொருள்கோடல் இந் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்பட்டால் அம் முரண்பாடு நீங்கிவிடும். எனவே பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் எனவும் குறிப்பிட்டார். 

சட்ட மூலத்தின் 4 ஆம் வாசகம், அரசியலமைப்பின் 136 ஆம் உறுப்பரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 4 (இ) ஆம் உறுப்பரைக்கு முரணானதெனவும் அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட முடியும். 

மேற்படி வாசகம் நீதிமன்றத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தத்தின் மூலம் திருத்தம் செய்யப்பட்டால் சட்ட மூலத்தின் மேற்படி முரண்பாடு நீங்கி விடும் எனவும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட மூலத்தின் 5, 6, 7 மற்றும் 8 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரைக்கு முரணானதாகாதெனவும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் எனவும், சட்ட மூலத்தின் ஏனைய ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானதாகாதெனவும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

No comments:

Post a Comment