தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சுற்றுலா சபாரி பூங்கா மீண்டும் திறப்பு - News View

Breaking

Friday, July 23, 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சுற்றுலா சபாரி பூங்கா மீண்டும் திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சுற்றுலா சபாரி பூங்கா ஆகியவற்றை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மக்களின் பார்வைக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மே மாதம் மிருகக்காட்சி சாலை மற்றும் சபாரி பூங்கா ஆகியன மூடப்பட்டன. அதற்கிணங்க அவை எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும். 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மக்கள் பார்வைக்காக அனுமதி வழங்கப்படும். 

அதேபோன்று ரிதியகம சுற்றுலா சபாரி பூங்கா 8:30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தினமும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலை ஆகியன மக்களுக்காக மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன. 

கடந்த 17ஆம் திகதி பின்னவல விலங்கியல் பூங்கா தினமும் காலை எட்டு 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மக்கள் பார்வைக்காக திறக்கப்படுவதுடன் பின்னவல யானைகள் சரணாலயமும் அந்த சம காலத்தில் மக்கள் காட்சிக்காக திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment