மகள் மீது தொடர் பாலியல் துஸ்பிரயோகம் : கணவன் மீது மனைவி முறைப்பாடு : சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 16, 2025

மகள் மீது தொடர் பாலியல் துஸ்பிரயோகம் : கணவன் மீது மனைவி முறைப்பாடு : சந்தேகநபரை கைது செய்த பொலிஸார்

(பாறுக் ஷிஹான்)

தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிலுள்ள புறநகர்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார்.

குடும்பத்தில் 3வது பிள்ளையான 14 வயது மதிக்கத்தக்க இம்மாணவியை அவரது தந்தை இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸாருக்கு சனிக்கிழமை (15) மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடற்றொழில் மேற்கொண்டு வருவதுடன், மாணவியின் தாயார் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வருபவராவார்.

மேலும், கைதான சந்தேகநபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் மருதமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை பகுதிகள் உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment