இலங்கையில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் - இன்று பிலியந்தலை MOH இல் ஆரம்பித்து வைப்பு - இதுவரை 8 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

இலங்கையில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் - இன்று பிலியந்தலை MOH இல் ஆரம்பித்து வைப்பு - இதுவரை 8 பேர் பலி

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று (09) ஆரம்பமானது.

இன்று காலை பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கலந்து கொண்ட இந்நிகழ்வில், பல்வேறு சிக்கல்களைக் கொண்ட, 35 வயதிற்கு மேற்பட்ட 35 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீன தயாரிப்பு Sinopharm கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென, அசேல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 1,743 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் 8 கர்ப்பிணி பெண்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் திட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்றையதினம் (08) 166 பேருக்கு Sinopharm தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad