வெளிநாட்டு சேவை (தரம் iii) விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதித் திகதி நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

வெளிநாட்டு சேவை (தரம் iii) விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதித் திகதி நீடிப்பு

இலங்கை வெளிநாட்டு சேவை (தரம் iii) க்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2020 (2021) க்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் 04 ஆம் திகதி வரை (04-.06-.2021) நீடிக்கப்பட்டுள்ளது.

09.04.-2021 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டமைக்கமைவாக விண்ணப்பதாரியின் அதிகபட்ச வயதெல்லை அமையுமென்றும் அதில் மாற்றங்கள் செய்யப்படவில்லையென்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி முன்னர் 10. 05.2021 னை குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இது தற்போது 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad