அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்ல பிராணிகளில் ஒன்றான 13 வயதான சாம்ப் என்ற நாய் உயிரிழந்துள்ளது.
இது குறித்து ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் டுவிட்டர் பக்கத்தில் தனது அனுதாபங்களை தெரிவித்திருந்திருந்தனர்.
ஜோ பைடனின் குடும்பத்தார் அரசு இல்லமான வெள்ளை மாளிகையில் குடியேறிய போது அவருடைய, செல்ல பிராணிகளான இரண்டு ஜேர்மன் ஷெபர்ட் ரக நாய்களும் குடி புகுந்தன.
அதில், உயிரிழந்த சாம்ப் என்ற நாய் 2008 இல் பைடன் குடும்பத்தில் இணைந்தது.
மேஜர் என்ற நாயை பைடன் டலாவரேயில் உள்ள பிராணிகள் மையத்தில் இருந்து 2018 இல் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment