தயவுசெய்து முழுதாய் வாசியுங்கள்...! உதவிக்கரம் நீட்டுவோம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

தயவுசெய்து முழுதாய் வாசியுங்கள்...! உதவிக்கரம் நீட்டுவோம்

உணவின்றி தவிக்கும் பலரின் உதவி கோரல்கள் தினமும் வந்த வண்ணமே உள்ளது எங்களால் முடிந்தவற்றை நண்பர்களின் உதவியுடன் செய்து வருகிறோம்.

ஒரே நாளில் நடந்த சில சம்பவங்கள் கீழே தருகிறேன்...!

சம்பவம் 1 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலை தொலைபேசி சினுங்கியது எடுத்து பேசினேன் மறுபுறம் அழுகுரலுடன் ஒரு சகோதரி நாநா எனக்கு அவசரமாக சிறு தொகை பணம் அனுப்பி வைக்க முடியுமா குழந்தைக்கு கொடுக்கும் பால்மா தீர்ந்து விட்டது பிளேன்டி கொடுத்து பார்த்துவிட்டேன் குடிக்க மறுக்கிறான் இரவு முழுவதும் அழுதழுது பலஹீனமாக உள்ளான் அவனுக்கு மருத்துவரின் ஆலோசனையில் ஒரு குறிப்பிட்ட பால்மாவே வழங்கி வருகிறேன் அது வாங்க பணம் இருந்தால் போதும் நாநா உடனே கனத்த மனதுடன் சேமிப்பில் இருந்து ஒரு தொகையை அனுப்பி வைத்தேன்.

சம்பவம் 2 
அதே அன்று காலையில் தெரிந்த நண்பரிடம் இருந்து ஓர் அழைப்பு நாநா தெரிந்த ஒருவர் உணவுக்கு வழியில்லாமல் கஷ்டபடுகிறார் சிறு உதவி செய்யலாமா நாநா உடனே அவருக்கு சிறு தொகை அனுப்பி வைத்தேன்.

சம்பவம் 3 
அதே அன்று காலை 10 மணியளவில் தெரிந்த சகோதரி கோல் எடுத்தார் நாநா தெமட்டகொடையில் ஒரு சிறிய வீட்டில் 5 சிறார்கள் வயதான தாய் இரண்டு விதவைகள் உட்பட 12 பேர் வசித்து வருவதாவும். கூலி வேலை செய்து வந்த இருவருக்கு கொரோனா காரணமாக தொழில் இல்லாததால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உண்பதாகவும் அதிலும் மீன் இறைச்சி சாப்பிட்டு சுமார் 1 மாத்திற்கு மேல் என்றும் முடிந்தால் உதவி செய்யுங்கள் என்று கூறினார். 

உடனே இந்த விடயத்தை இரண்டு வட்ஷப் குழுவில் பதிந்தேன் சுமார் ஒரு மணித்தியாலத்திற்குள் 500 ரூபாய் தொடக்கம் தம்மால் இயன்ற அளவு சிலர் உதவினர். ஒரு தொகை பணம் உடனடியாக சேர்ந்து விட்டது. இதில் உதவி செய்தவர்களில் சிலர் அண்மையில் வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்கள் இன்னும் சிலர் கொரோனா காரணமாக தொழில் இழந்தவர்கள். உடனடியாக அந்த பணத்தை கொண்டு அந்த குடுமபத்திற்கு தேவையான பொருட்களை சென்று வழங்கிவிட்டு வந்தோம். 

இவற்றை நான் பதிவிட காரணம் அசாதாரண சூழ்நிலைகளின் போது "நம்மால் என்னதான் செய்ய முடியும்" என நமக்கு நாமே, ஒரு கேள்வியை கேட்டு, நமக்கு நாமே ஒரு பதிலும் கூறி, அமைதியடைந்து போவதை விட, நம்மால் முடியுமானதை பகிர்ந்து கொண்டு, பங்களிப்புகளை செய்து ஒரு ஆத்ம திருப்தியை பெற்றுக் கொள்ளலாம். 

பலர் உணவில்லாமல் நோன்பிருப்பதாகவும் மூன்று வேலை உணவை சுருக்கி ஒருவேளையாக உண்கிறார்கள் என்றும் வரும் செய்திகள் மனதை கணக்க வைக்கிறது. 

நமக்கு தெரிந்த பலர் இதே நிலையில் இருக்கலாம் நாம் பெரிய தொகையை வழங்க தேவையில்லை, சிறு சிறு தொகையாக பலர் இனணந்தாலே பெரிய தொகையாக கொடுக்கலாம். 

ஏதோ எங்களால் முடிந்ததை நாம் நினைத்தால் செய்யலாம். செய்ய மனமிருப்பவர்கள் அவர்களால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறார்கள் மனமில்லாதவர்கள் சாக்கு போக்கு சொல்லி நன்மை தேடும் வாய்ப்பை இழக்கிறார்கள். 

இந்த பணியில் உதவி புரிந்த அத்தனை உள்ளங்களையும் இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும். மென்மேலும் பரக்கத்தையும், செழிப்பையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

கனத்த மனதுடன் இம்ரான் நெய்னார்
கொழும்பு 
2021.06.19

No comments:

Post a Comment