லிட்ராே கேஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தாெடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன் - கபீர் ஹாசிமின் கேள்விக்கு பதிலளித்த பந்துல குணவர்த்தன - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

லிட்ராே கேஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தாெடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன் - கபீர் ஹாசிமின் கேள்விக்கு பதிலளித்த பந்துல குணவர்த்தன

(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வசீம்)

லிட்ராே நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கு எதிராக செயற்பட்டிருந்தால், அதற்கு எதிராக வழக்கு தாெடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிதி முகாமைத்துவ பொறுப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் உரையாற்றும்போது, நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியில்லாமல் லிட்ராே நிறுவனம் 18 லீட்டர் கேஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்து நுகர்வோருக்கு நட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தும் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. 18 லீட்டர் கேஸ் சிலிண்டரின் நிறை 9 கிலாே கிரேமாகும். இதன் மூலம் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய இதனை செய்ய முடியாது.

அத்துடன் இந்தவகையான லிட்ராே கேஸ் சிலிண்டர் கடந்த இரண்டு மாதங்களாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசாங்கமோ சம்பந்தப்பட்ட அமைச்சராே இந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கையில் கேஸ் சந்தை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக 5 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த உப குழுவின் தீர்மானத்துக்கமைய கேஸ் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதன் பின்னர் தற்போது சந்தையில் இருக்கும் 18 லீட்டர் அடங்கிய செல்கேஸை சந்தையில் இருந்து அகற்றுவது தொடர்பில் தீர்மானிப்போம்.

அத்துடன் நுகர்வோர் அதிகார சபை சட்டத்துக்கு எதிராக எந்த நிறுவனம் செயற்பட்டாலும் அதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அந்த வகையில், லிட்ராே கேஸ் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கு எதிராக செயற்பட்டிருந்தால், அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad