ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் அதிரடி நடவடிக்கை : 200 க்கும் மேற்பட்டோர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் அதிரடி நடவடிக்கை : 200 க்கும் மேற்பட்டோர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட மாஃபியா மற்றும் பிகி பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

"தொழில்துறை அளவிலான" போதைப் பொருள் இறக்குமதி மற்றும் கொலைத் திட்டங்கள் குறித்து கிட்டத்தட்ட 25 மில்லியன் செய்திகளைத் திறந்த ஒரு செய்தியிடல் பயன்பாட்டில் ஊடுருவிய பின்னர் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஊடுருவலின்போது 21 கொலை சதிகளை கண்டுபிடித்ததாகவும், 3,000 கிலோ கிராம் மருந்துகள் மற்றும் 45 மில்லியன் அமெரிக்க டொலர் ரொக்கம் பணம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) மற்றும் ஆஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸ் (AFP) ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று ஆண்டு கூட்டு நடவடிக்கை உலக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலியா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குற்றவாளிகளை சிக்க வைத்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கையானது "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான பெரும் அடி என்பதுடன், அது நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சுற்றி எதிரொலிக்கும்" என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment