போர் நிறுத்தத்திற்குப் பின்னர் காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேலிய விமானப்படை புதன்கிழமை அதிகாலை காசா பகுதியில் விமானத் தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்ரேலின் இராணுவத்தினரும், காசாவில் உள்ள சாட்சியங்களும் தெரிவித்துள்ளன.

முற்றுகையிடப்பட்ட இடத்திலுள்ள ஹமாஸ் படையினர், தெற்கு இஸ்ரேலுக்கு தீக்குளிக்கும் பலூன்களை அனுப்பியமைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள பாலஸ்தீனிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட காட்சிகள் செவ்வாய்க்கிழமை - புதன்கிழமை இரவில் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தீப் பிழம்புகள் வானத்தை ஒளிரச் செய்வதை வெளிக்காட்டியது.

ஹமாஸின் இராணுவப் பிரிவுக்கு சொந்தமான தளங்கள், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் இஸ்ரேலின் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இதனால் எவரும் காயமடையவில்லை என்று ஹமாஸுடன் இணைந்த பாலஸ்தீனிய ஊடக மையம் ஆரம்பத்தில் செய்தி வெளியிட்டது.

அதன் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்ட இஸ்ரேலிய பாதுகாப்பு படை, அதன் போர் விமானங்கள் கான் யூனிஸ் மற்றும் காசா நகரத்தில் ஹமாஸ் செயற்பாட்டாளர்களின் இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளதாக கூறியது.

காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய குழுங்களுக்கு இடையே கடந்த மே 21 அன்று முன்னெடுக்கப்பட்ட எகிப்திய தரகு யுத்த நிறுத்தம் 11 நாள் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தது.

அந்த தாக்குதலில் 66 குழந்தைகள் உட்பட 256 பாலஸ்தீனியர்களை உயிரிழந்ததுடன், 12 இஸ்ரேலியர்களும் ஹமாசின் ரொக்கெட் தாக்குதல்களினால் பலியானார்கள்.

இந்த போர் நிறுத்தத்தின் பின்னர் அரங்கேறிய முதல் தாக்குதலாக அண்மைய சம்பவம் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment