சீனாவின் மற்றுமொரு கொவிட்-19 தடுப்பூசியான Sinovac தடுப்பூசியை அவசர பாவனைக்காக பயன்படுத்த, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே சீனாவினால் உற்பத்தி செய்யப்படும் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியான Sinopharm தடுப்பூசிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த, உலகளாவிய ரீதியிலான அவசர பயன்பாட்டுக்காக இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உலகளாவிய ரீதியிலான 6ஆவது கொவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசியாக இது அமைகின்றது.
இதேவேளை, நேற்று (31) வரை சீனாவின் Sinovac தடுப்பூசியின் 600 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் 40 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த மே 07 ஆம் திகதி Sinopharm கொவிட்-19 தடுப்பூசிக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment