மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய மேலும் ஒரு டொல்பின் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய மேலும் ஒரு டொல்பின்

மட்டக்களப்பு தாழங்குடா கடற்கரை பகுதியில் மேலும் ஒரு டொல்பின் மீன் இனம் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

சுமார் ஐந்து அரை அடி நீளம் உள்ள டொல்பின் மீன் இனமே இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கடல் வாழ் உயிரினங்களை அம்பாறை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவிற்கு அனுப்பி உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த உடற்கூற்று அறிக்கை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment