மன்னாரில் எரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

மன்னாரில் எரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

மன்னார் - முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இன்று (19) காலை கரை ஒதுங்கியுள்ளது.

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் மன்னார் மாவட்ட கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார் - முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.

ஏற்கனவே குறித்த கப்பலின் இரசாயன கழிவுகளினால் வாழ்வாதாரத் தொழில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்கள் திமிங்கிலம் கரை ஒதுங்கியதால் மேலும் அச்சமடைந்துனர்.

அண்மைக்காலமான மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு, வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளில் உயிரிழந்த நிலையிலும், கடுமையான சேதங்களுடனும் கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு - கிரான்குளம் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் இரண்டு டொல்பின் மீன் ஆகியன இன்று (சனிக்கிழமை) காலை கரையொதிங்கின.

அதேபோன்று கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலிலும் மூன்று கடலாமைகள் இன்று (19) கரையொதிங்கின. இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment