நேபாள பிரதமரை உச்ச நீதிமன்றம் நியமிக்க முடியாது என்று அந்த நாட்டின் பிரதமர் கே.பி. சா்மா ஓலி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிகள் சபை கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரித்து வரும் அரசியல் சாசன அமா்வு, இதுதொடா்பாக விளக்கமளிக்குமாறு பிரதமர் கே.பி. சர்மா ஓலி உத்தரவிட்டது.
அதையடுத்து, நீதிமன்றத்திடம் அவர் சமா்ப்பித்துள்ள எழுத்து மூலம் அளித்துள்ள விளக்கத்தில், சட்டங்களின் அடிப்படையிலும் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலும் நீதி வழங்க வேண்டியதுதான் நீதிமன்றங்களின் கடமையாகும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவற்றின் வேலையல்ல.
எனவே, நாட்டின் பிரதமரை உச்ச நீதிமன்றம் நியமிக்க முடியாது. ஒரு அமைப்பை அமைப்பதும் கலைப்பதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும்.
No comments:
Post a Comment