யாழ்ப்பாணம் நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

யாழ்ப்பாணம் நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள்

யாழ்ப்பாண பொலிஸாரினால் நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ் நகரில் இயங்கும் பேக்கரிகளில் நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று (19.06.2021) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment