முல்லைத்தீவு கூழாமுறிப்பு பாடசாலையில் இருந்த தற்காலிக கொட்டகை தீயில் எரிந்து நாசம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பாடசாலையில் இருந்த தற்காலிக கொட்டகை தீயில் எரிந்து நாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (19.06.2021) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை இன்று நண்பகல் திடீரென தீப்பற்றி எரிந்ததை அவதானித்த கிராம மக்கள் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட போதும் கொட்டகை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று நிலமைகளை பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment