கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று நாட்களில் ஐவர் மரணம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று நாட்களில் ஐவர் மரணம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பினிப் பெண்ணொருவரும், பிறைந்துறைச்சேனை அறபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு பேர் மரணமடைந்தனர்.

அத்தோடு, திங்கட்கிழமை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மரணமானதுடன், 74 வயதுடைய அவரது மனைவி நேற்று திங்கட்கிழமை இரவு மரணமடைந்ததுடன், வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் மரணமடைந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் காரணமாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இதுவரையில் ஐந்து பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad