தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : வவுனியாவில் சம்பவம்..! - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : வவுனியாவில் சம்பவம்..!

வவுனியா கற்குழி பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் இன்று (16) காலை பொது கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் உட்பட அவரின் உறவினர்கள் சுகாதார பிரிவினரினால் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டனர்.

இந்நிலையில் நேற்று (15) இரவு வீட்டிலிருந்து கணேசன் இளங்குமரன் (வயது-51) என்ற நபர் வெளியே சென்றுள்ள நிலையில் அவரை உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (16) காலை கற்குழி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை வீதியிலுள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸார் தகவல் வழங்கியமையினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனிமைப்படுத்தல் மன அழுத்தம் காரணமாக குறித்த நபர் இவ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் அவரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment