முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மீட்கப்படும் வெடி பொருட்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மீட்கப்படும் வெடி பொருட்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நாளாந்தம் வெடி பொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய முன்தினம் (28) முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் லதனி சிறுவர் இல்லத்துக்கு அருகில் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, முல்லைத்தீவு நகர் பகுதியில் சுனாமி நினைவாலயதிற்கு அருகிலும் வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (29) முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடி பொருடக்ள் சில மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு குண்டுகள், ஒரு கிழைமோர் குண்டு உள்ளிட்ட வெடி பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

போரின் போது பாவிக்கப்பட்ட குறித்த வெடி பொருட்கள் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்து வெடி பொருட்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து மீட்கப்பட்ட வெடி பொருட்களை தகர்த்து அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment