நாட்டை மீண்டும் முடக்காமல் கொவிட்டை கட்டுப்படுத்துவதே சுகாதார அமைச்சின் எதிர்பார்ப்பு - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

நாட்டை மீண்டும் முடக்காமல் கொவிட்டை கட்டுப்படுத்துவதே சுகாதார அமைச்சின் எதிர்பார்ப்பு - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

நாட்டை மீண்டும் முடக்காமல் கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதே சுகாதார அமைச்சின் எதிர்பார்ப்பாகும். ஆனால் சுகாதார வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதவிடத்து டெல்டா மாத்திரமல்ல, எந்தவொரு வைரசும் விரைவாக பரவக்கூடிய வாய்ப்புள்ளது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தற்போது நாளாந்தம் 18000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே அளவிற்கு சமமாக அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமையவே தினமும் சுமார் 2000 அண்மித்தளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். நாட்டில் இன்னும் கொவிட் பரவல் நீங்கவில்லை. எனவே மக்கள் கவனயீனமாக செயற்படாது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டிய அத்தியாவசியமானதாகும்.

இம்மாதம் 5 ஆம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

5 ஆம் திகதி வரையான மாற்றங்களை அவதானித்து அதன் பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment