மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது

ஜூலை 01 முதல் கட்டார், அமீரகம், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை வர தற்காலிக தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்ட அறிவித்தல் இறுக்கமான நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்றுமுன்தினம் (28) திகதியிடப்பட்டு அனைத்து விமான சேவைகளுக்கும் விடுத்த அறிவித்தலில், குறித்த நாடுகளுக்கு 14 நாட்களுக்குள் பயணித்த பயணிகள், ஜூலை 01 முதல் 13 வரை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

PCR தொடர்பான நம்பிக்கையின்மை காரணமாக, குறித்த முடிவை எடுத்திருந்ததாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் தற்போது PCR தொடர்பான பின்வரும் நிபந்தனைகளுடன் அத்தடை மீளப் பெறப்பட்டுள்ளது.

குறித்த நிபந்தனைகள் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் பயணத்திற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட PCR சோதனை அறிக்கையை பெற்றிருக்க வேண்டும். விமானத்திற்குள அனுமதி வழங்கும் முன், இதனை விமான சேவை நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும்.

விமானத்தில் நுழைவற்காக Antigen சோதனை அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது.

அரசாங்கம் அங்கீகரித்த வைத்தியசாலை அல்லது சோதனைக் கூடத்திலிருந்து, QR Code/Bar Code கொண்ட PCR சோதனை அறிக்கை பெறப்பட்டிருக்க வேண்டும்.

பயணிகளின் சோதனை அறிக்கைகள் தொடர்பான உண்மைத்தன்மையில், விமான சேவை நிறுவனம் கட்டாயம் திருப்தியடைந்திருக்க வேண்டும்.

பயணிகள் அனைவரும், ஹோட்டல் தனிமைப்படுத்தல் அல்லது இலங்கை சுற்றுலாத்துறை உயிரியல் குமிழியை பேணுவதன் அடிப்படையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment