பருத்தித்துறை பொலிஸார் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, June 20, 2021

பருத்தித்துறை பொலிஸார் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, உத்தியோகத்தர்கள் 17 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மீளவும் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று (சனிக்கிழமை) பெறப்பட்ட மாதிரிகளில், பருத்தித்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பருத்தித்துறை நீதிமன்றில் பணியாற்றும் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment